--- --:--:-- --

ஆண்கள் கருத்தடை செய்ய முன்வந்தால் தங்கத் தந்தை விருது..!

11

ஆண்கள் கருத்தடை செய்து கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக கரூர் மாவட்டத்தில் தங்கத் தந்தை என புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

 

கரூர் மாவட்ட மருத்துவர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் தமிழ்நாட்டிலேயே முன்மாதிரியாக கருத்தடை செய்து கொள்ள முன்வரும் ஆண்களை ஊக்குவித்து பெருமைப்படுத்தும் வகையில் கரூர் மாவட்டத்தில் தங்கத் தந்தை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி கருத்தடை செய்து கொள்ள முன்வரும் ஆண்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தங்கத் தந்தை விருது வழங்கிப் பெருமைப் படுத்தப்படுகிறது. மேலும் கருத்தடை செய்து கொள்ள முன்வரும் ஆண்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon