--- --:--:-- --

தொலைக்காட்சிகளில் நடிக்க பெண்களுக்கு தடை..!

10

ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சி சேனல்களில் பெண்கள் பங்கு பெறும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அரசு தடை விதித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் முழு கட்டுப்பாட்டுக்கு வந்த பின் அங்கு பெண்களின் உரிமைகள் மீண்டும் நசுக்கப்படும் என்று அஞ்சப்பட்டது.

 

அதை உறுதி செய்யும் விதமாக ஆப்கன் தொலைக்காட்சி சேனல்களில் இனி பெண்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப கூடாது என்று அரசு ஆணையிட்டுள்ளது. திரைப்படங்களில் பெண்கள் நடிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

 

தொலைக்காட்சித் தொடர்கள், சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணிபுரியும் பெண்கள் இனி ஹிஜாப் எனப்படும் தலைமுடியை மறைக்கும் தலைப்பாகையை அணிய வேண்டும் என்று ஆணையிடப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon