--- --:--:-- --

காற்று மாசு காரணமாக பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடல்..!

9

டெல்லியில் நிலவும் மோசமான காற்று மாசு காரணமாக அரசிடமிருந்து மறு அறிவிப்பு வரும் வரை பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் 10 நாட்களுக்கும் மேலாக நச்சுப் புகை மண்டலத்தால் சூழப்பட்டுள்ளது. பல நாட்களாக மிகவும் மோசமான மற்றும் கடுமையான மாசு நிலவுகிறது. மேலும் அடுத்த 3 நாட்களுக்கு இந்த நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இந்த நிலையில் டெல்லி மற்றும் மலைப் பகுதிகளில் காற்று மாசுபாடு நெருக்கடியை சமாளிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் அரசிடமிருந்து மறு அறிவிப்பு வரும் வரை செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

நவம்பர் 21ஆம் தேதி வரை அரசு அலுவலக பணியாளர்கள் 50 சதவீதம் பேர் பணியாற்ற வேண்டும் என்ற நடைமுறை பின்பற்ற ஊக்குவிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon