அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு அறிவிப்பு..!
வரும் ஜனவரி மாதம் கொண்டாடப்படவுள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாய விலைக் கடைகள் மூலம் அரிசி அட்டைதாரர்களுக்கு 20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 20 பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
அதில் ஏலக்காய், பாசிப் பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகு தூள், கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், கோதுமை மாவு உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கும்.
தமிழகத்தில் வசிக்கும் 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கும் தமிழர்களுக்கு இந்த பதவிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.






