பூஸ்டர் டோஸுக்கு WHO எதிர்ப்பு..!
பூஸ்டர் தடுப்பூசி ஊழல் மயமானது என கடுமையாக விமர்சித்திருக்கும் சுகாதார அமைப்பு பூஸ்டர் தடுப்பூசி வினியோகம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
உருமாற்றம் அடைந்த கொரொனா வைரஸ் பரவுவதை தடுக்க மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்த சில நாடுகள் ஆலோசித்ததற்கு உலக சுகாதார அமைப்பு ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தது. பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தால் ஏழை நாடுகள் தடுப்பு மருந்து கிடைக்காமல் பாதிப்படையும் என்றும் தடுப்பூசி வினியோகத்தில் ஏற்ற தாழ்வு ஏற்படும் என்றும் கவலை தெரிவித்தனர்.
ஆனால் உலக சுகாதார அமைப்பின் வேண்டுகோளை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகள் சில புறக்கணித்தன. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் பேசியபோது குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் முதன்மை அளவை விட 6 மடங்கு அதிகமான பூஸ்டர் தடுப்பூசி விநியோகிக்கப்படும் என்றும் இது ஒரு ஊழல் என்றும் நிறுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






