ஏசி இயந்திரத்தில் இருந்த பாம்பு..! பழுது பார்க்க முயன்றவர் பலி.!
சென்னை பள்ளிக்கரணையில் ஏசி எந்திரத்தை பழுதுபார்க்க முயன்ற வரை பாம்பு கடித்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். வ.உ.சி நகரில் வசித்த ஸ்ரீதர் என்பவர் தனது இயந்திரத்திலிருந்து எலி கீழே விழுந்த நிலையில் எந்திரத்தில் கையை விட்டு பார்த்துள்ளார்.
கையில் கயிறு போல் ஏதோ சிக்கிய நிலையில் அதனை இழுத்த பொழுது நல்ல பாம்பு கையில் வந்ததாக கூறப்படுகிறது. பாம்பு தாக்கியதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அவரை தீண்டி நல்ல பால பிடிபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






