டாஸ்மாக் கடைகளை 2வது நாளாக மூடி ஊழியர்கள் போராட்டம்..!
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 284 டாஸ்மாக் கடைகள் 2வது நாளாக மூடப்பட்டுள்ளன. மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றதாக 62 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் மதுப்பிரியர்கள் அவதிக்குள்ளாகினர். மயிலாடுதுறை மாவட்டத்திலும் 43 டாஸ்மாக் கடைகளை மூடி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




