4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை..!
தொடர் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை அளிக்கப்பட இருப்பதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மழை பாதிப்புகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்துள்ளார்.






