புகைப்படத்தை பகிர்ந்து ஆபாச கருத்துடன் பதிவிட்ட பிரமுகர் மீது புகார்..!

மூக வலைத்தளங்களில் தன்னுடைய புகைப்படத்தை பகிர்ந்து ஆபாச கருத்துடன் பதிவிட்ட பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடிகை காயத்ரி ரகுராம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியில் கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில தலைவராக இருப்பவர் காயத்ரி ரகுராம்.

 

இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

 

அதில் ஜெயச்சந்திரன் என்பவர் ஆபாச கருத்துடன் தன்னுடைய புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருப்பதாகவும் இது தனக்கு மன உளைச்சலை தருவதாகவும் தெரிவித்துள்ளார்.