தேர்தல் நடத்தும் அதிகாரி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு..!

தேர்தல் நடத்தும் அதிகாரி திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால் வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட தானே ஊராட்சி துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. ஒன்றியக்குழு தலைவர் பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் நடைபெற்றது.

 

அப்பொழுது தானே ஊராட்சி துணைத்தலைவர் பதவிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் பள்ளி ஆசிரியர் வாக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்த அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். ஊராட்சி துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.