டிக்டாக் பிரபலம் திவ்யாவை கைது செய்த சைபர் கிரைம் போலீஸார்..!
அவதூறாக பேசியதாக டிக்டாக் பிரபலம் திவ்யாவை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். தேனி மாவட்டம் தஞ்சாவூரைச் சேர்ந்தவர் திவ்யா. டிக் டாக் பிரபலமான இவர் தனியாக யுடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.
இதில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திவ்யா மீது ஏற்கனவே புகார்கள் அதிகம் நிறைந்துள்ளன. இதில் நாகலாபுரத்தில் சேர்ந்த திருமணமான பெண் ஒருவரை அவதூறாக பேசியதாக திவ்யா மீது புகார் அளிக்கப்பட்டது.
இதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் திவ்யாவை தேடிவந்தனர். தலைமறைவான அவரை கைது செய்துள்ளனர். திவ்யா நிலக்கோட்டை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே சர்ச்சைகளில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.






