--- --:--:-- --

தலையில் சுடப்பட்டு உயிரிழந்த தம்பியின் சடலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த சகோதரி..!

2

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மர்மமான முறையில் தலையில் சுடப்பட்டு கிடந்த 17 வயது சிறுவனின் சடலத்தை கண்டு அவரது சகோதரி அதிர்ச்சிக்குள்ளாகிய வீடியோ காண்போரை கண்கலங்க செய்தது.

 

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பகத் சிங் என்பவர் ஊரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதிகாலையில் புறப்பட்டு சென்ற 17 வயது சிறுவன் தலையில் சுடப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

 

அந்த சடலத்தை பார்த்த சகோதரி அதிர்ச்சியடைந்த வீடியோ கண்கலங்க வைக்கிறது. தகவலறிந்து வந்த போலீசார் அங்கிருந்த கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். துப்பாக்கி பயிற்சி பெற்றவர் என குடும்பத்தினர் கூறும் நிலையில் அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon