நடிகர் சூரியின் திருமண விழாவில் நகை திருடியவர் கைது..!
மதுரையில் நடிகர் சூரியின் இல்லத்தில் நகை திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரையை சேர்ந்த நகைச்சுவை நடிகர் சூரி இல்ல திருமண விழா கடந்த 1 ஆம் நாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
அப்போது அங்கு வைத்திருந்த 10 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக நடிகர் சூரியின் மேலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இளைஞர் ஒருவர் சந்தேகப்படும் படி அங்குமிங்கும் சுற்றியது தெரிய வந்தது பரமக்குடியை சேர்ந்த விக்னேஷ் என்பது நகையை திருடியதும், அவர் தான் நகையை திருடியது என்பதும் தெரியவந்தது.
அதை தொடர்ந்து தர்மபுரியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்து 10 சவரன் நகையை மீட்டுள்ளனர்.






