--- --:--:-- --

பெற்ற தாயை கழுத்தறுத்து கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்..!

3

கும்பகோணம் அருகே பெற்ற தாயை கழுத்தறுத்து கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். ரம்யா நகரை சேர்ந்த சரஸ்வதி என்பவரின் மகன் பழனியப்பன்.

 

சென்னை மெடிக்கல் ரெப் ஆக பணியாற்றி வந்த நிலையில் சாலை விபத்தில் தலையில் ஏற்பட்ட காயத்தால் மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் இன்று அதிகாலை சரஸ்வதிக்கும் பழனியப்பனுக்கும் இடையே வீட்டில் வாக்குவாதம் ஏற்பட்டதில் பழனியப்பன் தாய் சரஸ்வதியை கழுத்தறுத்துக் கொலை செய்ததாக சொல்லப்படுகிறது. கைது செய்த போலீசார் சென்னையில் உள்ள மனநல காப்பகத்தில் அனுப்பி வைத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon