பெண் குளித்ததை எட்டி பார்த்ததாக கூறி மாணவனை தாக்கிய பெண்ணின் உறவினர்கள்..!
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே 12ஆம் வகுப்பு மாணவனை மரத்தில் கட்டிவைத்து தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அந்த மாணவன் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் வீட்டில் சில நாட்களுக்கு முன் சிசிடிவி கேமராவை திருடியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திங்கள்கிழமை நண்பர்கள் உறவினர்களுடன் மாணவனை வெளியே இழுத்து வந்து வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பெண் குளிக்கும்போது எட்டி பார்த்ததாக கூறி மரத்தில் கட்டிவைத்து தாக்கியுள்ளனர்.
ஆனால் பொய்யான புகாரில் தன் மகனை அவர் தாக்கியுள்ளதாகவும், நில விவகாரத்தில் பழிவாங்க தாக்கியதாக பெற்றோர் கூறியுள்ளனர்.






