மதுரைக்கு எவ்வளவோ செய்ய நினைத்தேன்… ஆனால் முடியவில்லை” – பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
மதுரை மத்திய தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் அமைச்சர் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தனது தேர்தல் பரப்புரையின் போது ஒரு முக்கிய கருத்தைப் பதிவு செய்துள்ளார். மதுரை மாநகருக்கு எவ்வளவோ திட்டங்களைச் செய்ய வேண்டும் என்று தான் ஆசைப்பட்டதாகவும், ஆனால் நினைத்த எதையும் தன்னால் முழுமையாகச் செய்ய முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம் எனத் தெரிவித்த அவர், அரசியலில் இருப்பவர்களால் அனைத்து விஷயங்களையும் மிக வெளிப்படையாகப் பேச முடியாது என்ற ஒரு மர்மமான விளக்கத்தையும் அளித்துள்ளார். தற்போதைய அமைச்சராகவும் வேட்பாளராகவும் இருக்கும் ஒருவரின் இந்த “நினைத்ததைச் செய்ய முடியவில்லை” என்ற ஆதங்கமான பேச்சு மதுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




