15 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது..!
ஓமலூர் அருகே 15 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இப்பகுதியை சேர்ந்த 23 வயது சூர்யா என்பவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது மாணவியை கடந்த ஆறு மாதமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இதில் பள்ளி மாணவி கர்ப்பம் அடைந்ததை அறிந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரை பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






