சென்னையில் திடீரென ஏற்பட்ட பள்ளம்..!
சென்னை மயிலாப்பூர் சிவசாமி சாலையில் சுமார் 20 அடி நீளத்திற்கு பள்ளம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னையிலுள்ள சிவசாமி சாலையில் பாதாள சாக்கடை உடைந்து இடத்தில் சாலையில் பள்ளம் ஏற்பட்டது.
பாதாள சாக்கடை உடைந்ததால் சாலையில் அமைக்கப்பட்ட நடைபாதை உடைந்து அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி பலத்தை பள்ளத்தை ஒட்டி இரும்பு கம்பி வைத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.






