பச்சோந்தியை போல் வடிவமைக்கப்பட்டுள்ள ரோபோ பச்சோந்தி..!
தென் கொரியாவில் பச்சோந்தியை போல் வடிவமைக்கப்பட்டுள்ள ரோபோ பச்சோந்தி போலவே இருக்கும் இடத்திற்கு ஏற்ப நிறத்தை மாற்ற கூடியது. சியோல் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பிரத்தியேகமாக மற்றும் நுண்ணுயிர் கொல்லிகளை பயன்படுத்தி மிக மெலிதான செயற்கை தோல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தோலில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள் மூலம் சுற்றியுள்ள நிறம் கண்டறியப்பட்டு தோலுக்கு அடியிலுள்ள மையத்திற்கு தகவல் அனுப்பப்படுகிறது. அந்த நிறத்தை உருவாக்க தேவையான வெப்பத்தை உருவாக்கி அதன்மூலம் மாற்றப்படுகிறது.
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிரிகளிடம் எளிதில் புலப்படாத ராணுவ உடைகளை வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.






