பத்திரிக்கையாளர்களை கைது செய்து தனியறையில் சித்திரவதை செய்த தாலிபான்கள்..!
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பத்திரிக்கையாளர்களை கைது செய்து தனியறையில் சித்திரவதை செய்து நிர்வாண நிர்வாணபடுத்தி தாக்கிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. செய்தி நிறுவனம் இந்த படங்களை ட்விட்டரில் வெளியிட்டு உள்ளது.
அதில் இரண்டு பத்திரிகையாளர்கள் உள்ளாடையுடன் நிற்க வைக்கப்பட்டு பின்புறத்திலிருந்து புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. அவர்கலின் பின்புறத்தில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன . 4 மணி நேரத்திற்கு மேலாக தாலிபான்கள் தங்களை தாக்கியதாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.






