உடல் மெலிந்த நிலையில் மக்கள் முன் தோன்றிய வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்..!
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல் மெலிந்த நிலையில் மக்கள் முன் தோன்றினார். வடகொரிய அதிபருக்கு உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இந்த நிலையில் நேற்று தேசிய தினம் கொண்டாடப்பட்டது.
அப்போது நடைபெற்ற நிகழ்ச்சி தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அப்போது வந்த கிம் ஜாங் உன் மக்களைப் பார்த்து கையசைத்தார். அப்போது அவரது உடல் மெலிந்த நிலையில் காணப்பட்டதாகவும் 20 கிலோ வரை உடல் எடை குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.






