4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை..!
புதுக்கோட்டையில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் கடந்த 2003 ஆம் ஆண்டு 4 வயது சிறுமியை சக்கரவர்த்தி என்ற நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் .
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த வினோத் சக்கரவர்த்தி தலைமறைவாகிவிட்டார். 16 ஆண்டுகளாக அவரை தேடிவந்த நிலையில் ஜமீன் என பெயரை மாற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரண்டு திருமணங்களை செய்து கொண்ட அவர் வாழ்ந்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்து சிபிசிஐடி காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ள புதுக்கோட்டை மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.






