--- --:--:-- --

அதிகளவில் மாத்திரைகளை உட்கொண்ட 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு..!

13

வீட்டில் கைக்கு எட்டிய தூரத்தில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை உட்கொண்ட 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அசோக் நந்தினி தம்பதியின் இரண்டாவது குழந்தைக்கு இரண்டு வயது.

 

கடந்த 3ஆம் தேதி குழந்தைக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காததால் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் பாராசீட்டமால் மாத்திரையை குழந்தை அதிகளவில் உட்கொண்டதை கண்டறிந்தனர்.

 

உயர் சிகிச்சை அளித்த பொழுது உடல்நிலை ஒத்துழைக்காததால் குழந்தை உயிரிழந்தது தொடர்பாக மருத்துவரிடம் கேட்டபோது அதிகளவு மாத்திரை சாப்பிட்ட 8 மணி நேரத்திற்குள் சிகிச்சைக்கு வந்து இருந்தால் குழந்தையை காப்பாற்றி இருக்கலாம் எனவும் மாத்திரை உட்கொண்டு 12 மணி நேரத்திற்கு மேல் ஆனதால் சிகிச்சைக்கு குழந்தையின் உடல் ஒத்துழைக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon