--- --:--:-- --

கணவன் தோளில் சுமந்து சென்ற போதே உயிரிழந்த மனைவி..!

1

உடல்நலம் குன்றிய மனைவியை கணவன் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு மருத்துவமனைக்கு தோளில் சுமந்து சென்ற பொழுது பாதி வழியிலேயே அந்த பெண் உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது.

 

நந்த்ருபார் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஒரு இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அப்பொழுது ஒரு பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவரை கணவர் தனது தோளில் சுமந்தபடி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தார்.

 

அதன்படி சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவிற்கு சுமந்து சென்ற நிலையில் கணவரின் தோளிலேயே அந்த பெண் உயிரிழந்தார். இந்த நிகழ்வு நந்த்ருபார் மாவட்ட மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon