படகை தானே பள்ளிக்கு ஓட்டிச் செல்லும் மாணவி..!
உத்திர பிரதேசத்தில் பள்ளி மாணவி ஒருவர் கல்விக்காக தினமும் படகில் சென்று வருகிறார். கொரொனா பரவல் குறைந்ததை அடுத்து உத்திரப்பிரதேச மாநிலத்தில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.
வெள்ளம் காரணமாக பதினோராம் வகுப்பில் பயின்று வரும் சந்தியா என்ற மாணவி தினமும் பள்ளிக்கு படகில் சென்று கல்வி பயின்று வருகிறார்.
தன்னிடம் ஸ்மார்ட் போன் இல்லாத காரணத்தினால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியவில்லை என்று கூறும் அந்த மாணவி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டபோது தங்கள் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது என்றும் அதனால் படகில் பள்ளிக்கு சென்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.






