விவாகரத்தான பெண்களை குறிவைத்து பணம் பறித்த நைஜீரிய கும்பல்..!
பண்பு பரிசு என்ற பெயரில் விவாகரத்தான பெண்களை ஏமாற்றி பணம் பறித்த நைஜீரிய கும்பலை தமிழக தனிப்படை போலீசார் கைது செய்தனர். சென்னை பெரம்பூரை சேர்ந்த 45 வயது பெண் திருமண தகவல் இணையதளம் மூலம் அறிமுகமாகி இருவரும் நட்பாக பழகி வந்துள்ளார்.
நெதர்லாந்தில் பணியாற்றுவதாக கூறிய சலீம் பெரம்பூர் பெண்ணுக்கு பரிசு வழங்குவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து விமான நிலையத்தில் இருந்து பேசுவதாக கூறிய நபர் ஒருவர் தன்னிடம் கோடிக்கணக்கில் மதிப்புள்ள பரிசுப் பொருட்களை பெற வரி செலுத்த வேண்டும் எனக்கோரி 4 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளார்.
அந்த நபர் மீண்டும் பணம் கேட்டதால் சந்தேகம் அடைந்த பெண் மத்திய பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். இதேபோல் சென்னை சைபர் கிரைம் போலீசுக்கு ஏற்கனவே பத்துக்கு மேற்பட்ட புகார்கள் வந்தன. எனவே போலீசார் அவர்களை கைது செய்தனர்.






