--- --:--:-- --

ரசாயனம் தடவிய 200 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்..!

12

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தனியார்  மீன் குடோனில் ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்புத் துறையினர் ரசாயனம் தடவிய 200 கிலோ கெட்டுப்போன மீனை பறிமுதல் செய்தனர்.

 

கேகேஎஸ்எஸ்ஆர் தனியாருக்கு சொந்தமான மீன் குடோனில் ஆந்திர மாநிலத்தில் பல நாட்களுக்கு முன்பு பிடித்து நிறுத்தி வைத்திருந்து பார்மலின் ரசாயனம் தடவி பதப்படுத்தி விற்பனைக்கு முயன்றதும் தெரிய வந்தது.

 

இதேபோல் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 50 கிலோ கெட்டுப்போன மீன்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon