--- --:--:-- --

சூரிய ஒளியில் ஓவியம் வரையும் இளைஞர்..!

13

இந்தியாவிலேயே முதல் முறையாக சூரிய ஒளிக்கதிர்களை குவித்து மரப்பலகையில் நெருப்பை உருவாக்கி சன் லைட் பர்னிங்வுட் ஆர்ட் வரைந்து வருகிறார் மயிலாடுதுறையை சேர்ந்த இளைஞர்.

 

மயிலாடு துறையை சேர்ந்த விக்னேஷ் பட்டப்படிப்பை முடித்து ரத்தசோகை பாதிப்பால் 2015ஆம் ஆண்டு நடக்க முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளார். அப்போது பொழுதுபோக்குகாக ஓவியம் வரைய ஆரம்பித்தார்.

 

இவற்றில் சூரிய ஒளிக்கதிர்களை கொண்டு மரப்பலகையில் உருவாகி வரும் படம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஓவியத்திற்கான மூலதனம் வெயில் என்பதால் சுட்டெரிக்கும் வெய்யிலில் இந்த ஓவியங்களை வரைகிறார். கலைஞர்கள் விஜய், அஜித் படங்களை இந்த முறை மூலம் வரைந்துள்ளார் .

 

இதேபோல திறமையான பல ஓவியர்களுக்கு அரசு அங்கீகாரம் அளித்து ஓவியக்கலையை மேம்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon