தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ வெளியிட்டுவிட்டு தூங்கிய சூர்யா தேவி..!
டிக் டாக் பிரபலமான சூர்யா தேவி தற்கொலை செய்து கொள்வதாகக் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சூர்யா இருக்கிறார்.
இவர் சமீபத்தில் மணப்பாறையில் பிரபலமான டிக் டாக்கரை சாலையில் வைத்து செருப்பால் அடிக்கும் வீடியோ காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
தலைமறைவாக இருந்த சூர்யாவை நேற்று மதுரை காவல்துறை உயர் அதிகாரிக்கு அனுப்பிய வீடியோவில் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த மணப்பாறை காவல்துறை தலைமையிலான 10க்கும் மேற்பட்ட போலீஸார் காந்திநகரில் உள்ள சூரிய தேவியின் வீட்டில் நள்ளிரவில் சென்றனர். ஆனால் வீட்டின் உள்பகுதி பூட்டப்பட்டிருந்ததால் தீயணைப்புத் துறையினரின் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது சூர்யா தேவி 8 வயது மகளுடன் தூங்கி கொண்டு இருந்துள்ளார் ,அறையில் மின் விசிறியில் வேஷ்டியை தூக்கி போடுவது போல் மாற்றி வைத்துள்ளார். பின்னர் போலீசார் அவரை எச்சரித்துள்ளனர்.






