--- --:--:-- --

வாணி போஜனுக்கு இந்த மாதிரி கேரக்டரில் நடிக்க பிடிக்குமாம்..!

13

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் தான் நடிகை வாணி போஜன். பிரபல சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த வாணி போஜன் கடந்தாண்டு வெளியான ஓர் படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

 

இருப்பினும் கடந்த ஆண்டு வெளியான ஓ மை கடவுளே படம் தான் இவருக்கு பெரிய அளவில் அறிமுகம் தந்தது. இதனையடுத்து வைபவ் உடன் இணைந்து லாக்கப் என்ற படத்திலும், ஜெய்யுடன் இணைந்து ட்ரிபிள்ஸ் என்ற வெப் தொடரிலும் நடித்திருந்தார். இதன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். இது தவிர சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் வாணிபோஜன் அடிக்கடி தனது புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.

 

தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “மகான்” படத்தில் நடித்துள்ள வாணி போஜன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon