அமெரிக்காவுக்கு தலிபான்கள் விடுத்துள்ள எச்சரிக்கை..!
அமெரிக்கா ஏற்கனவே அறிவித்தபட்டபடி வரும் 31-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளை விலக்கிக்கொள்ளாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தலிபான்களின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
அமெரிக்காவும் இங்கிலாந்தும் தங்களது படைகளை திரும்பப் பெறுவதற்கு கூடுதல் அவகாசம் கோரினால் அது தங்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் 31 ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்பும் அனைத்து அமெரிக்கர்களையும் வெளியேற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை என அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து ஆலோசனை செய்வதற்காக பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஏழு கூட்டமைப்பு நாடுகளின் அவசர கூட்டத்திற்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்துள்ளார்.






