செப்டம்பர் 10ஆம் தேதி தலைவி திரைப்படம் வெளியாகும் என அறிவிப்பு.!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத், எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமியும் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
தமிழ்,தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி படம் வெளியாக இருந்த நிலையில் ஊரடங்கு காரணமாக படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு தற்போது செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






