சென்னையில் சுனாமி வர வாய்ப்பு இல்லை..!
சென்னைக்கு அருகே நில அதிர்வு உணரப்பட்டதனால் யாரும் அச்சமடைய வேண்டாம் என தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். சென்னைக்கு அருகே வங்கக்கடலில் 5.1 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது.
தனியார் வானிலை ஆய்வாளர் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து வெகு தொலைவில் இருப்பதாக கூறிய அவர் வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





