பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டத்தை அறிவுரைக் கழகம் உறுதி செய்திருக்கிறது..!
பப்ஜி மதன் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை அறிவுரைக் கழகம் உறுதி செய்திருக்கிறது. மத்திய குற்றப்பிரிவு காவல் துறையால் தொடுக்கப்பட்ட வழக்கில் பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டம் குறித்து கடந்த 6ஆம் தேதி அறிவுரை கழகத்தில் விசாரணை நடந்தது. அறிவுரை கழக நீதிபதி ரகுபதி, ராமன், மாசிலாமணி ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. பப்ஜி மதன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை அறிவுரைக் கழகம் தற்போது உறுதி செய்துள்ளது.






