--- --:--:-- --

நீங்கள் எப்போது நடிப்பீர்கள் என ரசிகர் எழுப்பிய கேள்விக்கு ஏ.ஆர் ரகுமான் அளித்த பதில்..!

11

நீங்கள் எப்போது நடிப்பீர்கள் என ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் பல தசாப்தங்களாக இசையுலகை ஆண்டவர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான்எனக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

 

பல ஆண்டுகளாக இசை உலகில் அவர் வலம் வரும் போதும் நடிப்பதில் அவர் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் அது குறித்து தனது ரசிகர் எழுப்பிய கேள்விக்கு சுவாரசியமாக ரகுமான் பதில் அளித்துள்ளார்.

 

ரசிகர் ஒருவர் உங்கள் நடிப்பில் வெளியான படத்தை நாங்கள் எப்போது எதிர்பார்க்கலாம் என கேட்டதற்கு ரொம்ப நாளைக்கு நான் நிம்மதியாக இருக்கணும்னு நினைக்கிறேன் அதில் உங்களுக்கு விருப்பம் இல்லையா என நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon