இந்தியாவில் உள்ள 12 கடலோர நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம்..!
2100 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள 12 கடலோர நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது என நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பநிலை உயர்ந்து வருவதால் கடல் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரித்து வருகின்றன.
உலகளாவிய சராசரி கடல் மட்டம் ஆண்டுக்கு சுமார் 1.7 கிலோ மீட்டர் வேகத்தில் உயர்ந்து வருகிறது. மேலும் இமயமலை உள்ளிட்ட பகுதிகளில் பனிப்பாறைகள் உருகும் விகிதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடல் நீர் மட்டம் உயர்வது குறித்த தரவுகளை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது. 2100 ஆம் ஆண்டுக்குள் இந்திய கடலோரப் பகுதியில் உள்ள மும்பை, கொச்சி, விசாகப்பட்டினம், சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட 12 கடலோர நகரங்கள் சராசரியாக 3 மீட்டர் அளவு நீருக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






