அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் பள்ளிக்கு வர துவங்கியுள்ளனர்..!
தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் மீண்டும் பள்ளிக்கு வர துவங்கியுள்ளனர். கொரொனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
புதிய கல்வியாண்டு தொடங்கியதால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மட்டும் பள்ளிகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மாணவர் சேர்க்கை, பாடப்புத்தகங்கள் விநியோகம், பராமரித்தல் போன்ற பணிகளுக்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.






