--- --:--:-- --

வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவிற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து..!

7

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற பேட்மிட்டன் வீராங்கனை சிந்துவிற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் பேட்மிட்டன் போட்டியில் சீன வீராங்கனையை எதிர்த்து இந்தியாவின் பிவி சிந்து வெண்கலப்பதக்கம் வென்றார். இதையடுத்து அவரை பாராட்டி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.

 

அதில் தனது சிறப்பான ஆட்டத்தால் இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுத்துள்ள சிந்துவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் நாட்டிற்காக பல பதக்கங்களை அவர் வருங்காலத்தில் வெல்ல வேண்டும் எனவும் முதலமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon