--- --:--:-- --

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிப்பு..!

1

மிழ்நாட்டில் கொரொனா அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் கூடுதல் தளர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

கடந்த சில வாரங்களாக தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் சிறு நகரங்களில் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக கூறியுள்ளார் எனவே அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

 

மேலும் சில குறிப்பிட்ட பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் சேர்வது தொடர்ந்து காணப்பட்டால் அந்தப் பகுதியை மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையர் காவல் துறையினர் முடிவு செய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

தனிமனித இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் வணிக

 

நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு கட்டாயமாக உடல் வெப்பநிலை பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் வரிசையில் காத்திருக்கும் பொது மக்கள் கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

மூன்றாவது அலையில் பொதுமக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon