--- --:--:-- --

இன்றும், நாளையும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்..!

5

கேரளாவில் கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அந்த மாநிலத்தில் இன்றும் நாளையும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி முதல் இரண்டு அலை வேகமாக பரவியது.

 

இதனால் தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்பும் அதிகரித்துவிட்டது. மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட முயற்சியால் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் ஒரு மாநிலங்களில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

 

குறிப்பாக கேரள மாநிலத்தில் கொரொனா தொற்று தீவிரமாக உள்ளது. இதனால் கேரளாவில் கொரொனா பரவலை தடுக்க மத்திய குழுவினர் முகாமிட்டுள்ளனர்.

 

கேரளாவில் தினசரி கொரொனா பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ள நிலையில் கொரொனா பரவலைத் தடுக்க அந்த மாநிலத்தில் இன்றும் நாளையும் தளர்வுகள் இல்லாதபோது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

 

மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே முழு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon