--- --:--:-- --

மத்தியக் கிழக்கு நாடுகளில் டெல்டா வகை தொற்று அதிகரிப்பு..!

10

டெல்டா வகை கொரொனா மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்துள்ளதால் 4வது அலை தாக்கியுள்ளதாக உலக நலவாழ்வு அமைப்பு தெரிவித்துள்ளது. ஈரான், ஈராக், துனிசியா, லிடியா உள்ளிட்ட 15 நாடுகளில் 4வது அலை கொரொனா பாதிப்பும், கொரொனா உயிரிழப்பும் அதிகரித்துள்ளது.

 

கடந்த நான்கு வாரங்களில் வாரத்துக்கு 3 லட்சத்தி பத்தாயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும் 3,500 பேர் உயிரிழந்ததாகவும் உலக நலவாழ்வு அமைப்பு தெரிவித்துள்ளது. முந்தைய மாதத்தை ஒப்பிடும் பொழுது கொரொனா பாதிப்பு 55 விழுக்காடு உயிரிழப்பு 15 விழுக்காடு அதிகரித்துள்ளது.

 

இந்த நாடுகளின் மொத்த மக்கள் தொகையில் 50 விழுக்காட்டினர் கொரொனா தடுப்பூசி போட்டு உள்ளதாகவும் தடுப்பூசி போடாதவர்கள் பாதிப்புக்குள்ளாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon