--- --:--:-- --

நிபுணர்கள் எச்சரிக்கையை மீறி தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கொரொனா அதிகரிப்பு..!

11

ங்கிலாந்தில் நிபுணர்கள் எச்சரிக்கையை மீறி தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் 58 லட்சத்தை தாண்டியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் போரிஸ் ஜான்சன் கடந்த 19ஆம் தேதி முதல் கொரொனா கட்டுப்பாடுகளை தளர்த்தி உத்தரவிட்டார். இதனால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினார்.

 

இதனிடையே இந்த நாட்டில் 60 சதவீத மக்களுக்கு கொரொனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் தொற்று பாதிப்பு குறைந்து வந்தது. இந்த நிலையில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் இங்கிலாந்தில் கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.

 

கடந்த 24 மணிநேரத்தில் 31 ஆயிரத்து 517 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த தொற்று எண்ணிக்கை 58 லட்சத்தை கடந்துள்ளது. கொரொனா பாதிப்பால் 85 பேர் உயிரிழந்த நிலையில் மொத்தம் உயிரிழப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 515 ஆக உயர்ந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon