--- --:--:-- --

22 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது..!

2

நாட்டின் 22 மாவட்டங்களில் கடந்த நான்கு வாரங்களில் கொரொனா தொற்று அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 54 மாவட்டங்களில் 10 சதவீதத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று பரவி இருப்பதாகவும் இது மிகவும் கவலை அளிப்பதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார அமைச்சகத்தின் இணைச்செயலாளர் கேரளாவின் 7 மாவட்டங்கள், மணிப்பூரின் 5 மாவட்டங்கள், மேகாலயாவின் மூன்று மாவட்டங்களில் தொற்று அதிகரித்துள்ளதாக தெரிவித்த 52 மாவட்டங்களில் தினசரி தொற்று எண்ணிக்கை இன்னும் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

 

மே மாதம் மூன்று லட்சத்து 87 ஆயிரம் ஆக இருந்த கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை ஜூன் இறுதி வாரத்தில் 30 ஆயிரமாக குறைந்து இருப்பதாகவும் அவர் கூறினார்.

 

அதே வேளையில் சில பகுதிகளில் மட்டும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கொரொனா அதிகரித்து வருவது குறித்து சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon