--- --:--:-- --

பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பதிவிறக்கம்..!

7

பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதன்படி www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் மதிப்பெண் பட்டியல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

 

அனைத்து தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளி மாணவர்களுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் ஏற்கனவே தேர்வு துறை தெரிவித்துள்ளது.

 

முன்னதாக தற்போதைய மதிப்பெண்களை பெற்று திருப்தி இல்லாமல் தேர்வு எழுத வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் விரும்பும் மாணவர்கள் மற்றும் பிளஸ் 1 தேர்வில் வரமுடியாமல் போனவர்களுக்கு தனியாக அழைப்பு விடுக்கப்படும்.

 

அதில் எத்தனை பேர் பதிவு செய்கிறார்கள் என்றும் பார்த்து செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon