--- --:--:-- --

தொங்கு தசை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இளம்பெண்..!

8

இளம்பெண் ஒருவர் தொங்கு தசை நோயால் கடுமையாக பாதித்து உள்ளார். இளம்பெண் ஒருவர் தொங்கு தசை நோயால் கோரமாக பாதிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஏம்பலம் கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில் தாய் மற்றும் தாய் மாமன் பாதுகாப்பில் இளம்பெண் ஜெயசித்ரா வசித்து வருகிறார்.

 

அவர்தான் இந்த கொடிய பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். கூலி வேலைக்கு செல்லும் தாயின் சொற்ப வருமானத்தில் வசிக்கும் அவர் மாதம் ஆயிரம் ரூபாய் தரும் அரசின் உதவிகளில் காலம் கடத்தி வருகிறார்.

 

தொங்கு தசை நோயால் பாதித்த அவருக்கு அறுவை சிகிச்சை செய்த நிலையில் மீண்டும் தசை வளர்வதால் நிரந்தர தீர்வு பெற்று மீளாத்துயரில் உள்ளார். கண், காது, மூக்கு, வாய் என முகம் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது ஒருபுறம் தசை இழுப்பது உள்ளிட்ட காரணங்களால் வலது கண் பார்வையிலும் சிரமம், பேச்சு சிரமம், இளம் பெண்கள் சித்ராவிற்கு தொடரும் வலி மற்றும் உறக்கமின்மை உள்ளிட்ட தொந்தரவுகள் அவரை விடுவதில்லை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon