ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை வட்டாட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம்..!
சுருக்குமடி வலைக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என உண்ணாவிரதம் இருந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பேரணியாக சென்று தங்களுடைய ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை வட்டாட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, திருமுல்லைவாசல் மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என கோரி மூன்றாவது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தங்களது ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை பாட்டியிடம் ஒப்படைக்க பேரணியாக சென்றனர்.
திருமுல்லைவாசலில் இருந்து பேரணியாக புறப்பட்ட அவர்கள் சீர்காழி தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தங்களுடைய ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




