சசிகலா குறித்து எடப்பாடி பழனிசாமி அளித்துள்ள பேட்டி..!
சசிகலா தொடர்ந்து தவறான தகவல்களை தெரிவிப்பதாகவும் அதிமுகவை வீழ்த்த யாராலும் முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய பின்னர் பேசிய அவர் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது என்றார்.
தொடர்ந்து அதிமுக ஆட்சியில் கொரொனா தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி தடுப்பூசி வீணடிக்கப்படவில்லை எனவும் அப்போது பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை எனவும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




