--- --:--:-- --

சிறுவன் கொல்லப்பட்டதா எழுந்த புகாரில் மண்டையோடு கண்டெடுப்பு..!

4

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மனவளம் குன்றியோருக்கான காப்பகத்தில் இருந்த சிறுவன் அடித்து கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில் காவல் துறையினர் ஆய்வு நடத்தினர்.

 

அந்த இடத்தை தோண்டியபோது மண்டையோடு மற்றும் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. அதிராம்பட்டினத்தை சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவர் அந்த பகுதியில் மனவளம் குன்றியவர்களுக்கு காப்பகம் நடத்தி வருகிறார்.

 

இங்கு 20க்கு மேற்பட்ட சிறுவர்கள் உள்ள நிலையில் அவர்களில் ஒருவர் கொல்லப்பட்டதாக காப்பக நிர்வாகி ஷேக் அப்துல்லாவின் மனைவியான கலிமா 8 மாதங்களுக்கு முன் புகார் அளித்திருக்கிறார்.

 

இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் புகார் அளித்தவர் சுட்டிக்காட்டிய இடத்தில் நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டும் பணி நடைபெற்றது. தோண்டியதில் 3 அடியின் போதே மண்டை ஓடும் எலும்புக்கூடும் தென்பட்டது.

 

தோண்டி எடுக்கப்பட்டு சுகாதாரத்துறையினரின் ஆய்வுக்கு உட்படுத்த ஒப்படைக்கப்பட்டதாக உரிமையாளர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon