கொரொனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது..! கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டாம்..!
கொரொனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்பதால் மத்திய, மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கோவில்களில் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டு மக்கள் இருப்பது தொடர்வதாக கூறப்பட்டுள்ளது.
இது மூன்றாவது அலைக்கு காரணமாக மாறக் கூடும் என்பதால் மக்கள் திரளாக கூடுவதை தடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கைகள் மற்றும் மருத்துவர்களின் கடும் முயற்சி காரணமாக நாடு தற்போது இரண்டாம் நிலை தாக்கத்திலிருந்து மீண்டு வந்து இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மூன்றாவது அலை தவிர்க்க முடியாவிட்டாலும் அதன் பாதிப்பை தடுக்க முடியும் என்று இந்திய மருத்துவ சங்கம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






