காதலித்து வந்த மகளை வேறொரு நபருடன் திருமணம் செய்து வைத்து தந்தை படுகொலை..!
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே காதலித்து வந்த மகளை வேறு ஒரு நபருடன் திருமணம் செய்து வைத்து தந்தை படுகொலை செய்யப்பட்டார். வைப்பூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகள் விஜி அதே பகுதியில் வசிக்கும் அஜீத்தை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் கடந்த 20ஆம் தேதி வீட்டை விட்டு சென்றுள்ளனர். காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து விஜி அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில் விஜிக்கு அவரது உறவினரோடு திருமணம் செய்து வைத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது. இரு சக்கர வாகனத்தில் சென்ற கண்ணனை அருண் உள்ளிட்டவர்கள் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி காவல் நிலையம் முன்பாக அவரது உடலை வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.






